அரசு மருத்துவமனை காணொளி மூலம் திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே அரசு பொது வெளி நோயாளிகள் பிரிவு 2000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிய பொது மருத்துவமனையை இன்று காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
மருத்துவமனையில் தரைதளத்தில் 12 படுக்கை அறைகள் பெண்கள் வார்டு மற்றும் எக்ஸ்ரே அறை, மின் தூக்கி ஆகியவற்றை பொருத்தப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் 12 படுக்கை அறை கொண்ட ஆண்கள் பிரிவு மற்றும் நோயாளிகள் காத்திருக்கும் அறை, அறுவை சிகிச்சை அறை என பல்வேறு புதிய தொழில் நுட்பங்களோடு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்ணாம்பட்டு ஒன்றியம் மற்றும் நகர மக்கள் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை அமைய பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அகமது, வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்ய ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக