மும்பை -நாகர்கோவில் ரயில் சாமல்பட்டியில் நின்று செல்லும். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

மும்பை -நாகர்கோவில் ரயில் சாமல்பட்டியில் நின்று செல்லும்.

மும்பை -நாகர்கோவில் ரயில் சாமல்பட்டியில் நின்று செல்லும்.



மும்பை -நாகர்கோயில் ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.


 இதனையடுத்து 
மும்பை -நாகர்கோவில் ரெயில் சாமல்பட்டியில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது .


இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,


ரயில் எண்.16339/16340 மும்பை - நாகர்கோயில் ரெயில்
மற்றும்
 மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சோதனை அடிப்படையில் சாமல்பட்டியில் நிறுத்தப்படுகிறது.


 ரயில் எண்.16339 மும்பை 
 - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்
 செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மும்பையில் இருந்து இரவு 8.35 மணிக்குப் புறப்பட்டு சாமல்பட்டியில் நின்று செல்ல பரிசோதனை நிறுத்தம் அமலுக்கு வருகிறது.


 ரயில் எண்.16340 நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்
திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, சாமல்பட்டியில் சோதனை முறையில் நிறுத்தப்படுகிறது.


இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சேலம் ரயில்வே கோட்டம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad