குற்றாலம் பேரருவி பகுதிகள் தீ விபத்து 40-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

குற்றாலம் பேரருவி பகுதிகள் தீ விபத்து 40-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருகுற்றால நாதர் சுவாமி திருக்கோயில் தெற்கு வாசல் அருகே அமைந்துள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 


இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி துணைத் தலைவர் விவேக் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு படை வீரர்களுடன் களத்தில் இருந்து தீயை அணைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். 


மேலும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து தீயை அணைப்பதற்கு தீயணைப்புத்துறையினர் இணைந்து பணியாற்றியுள்ளார் மேலும் அங்கே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்று உறுதியளித்தார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad