இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில், தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நீண்ட தூரம் நடந்து சென்று, நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அதேபோன்று காலனி பகுதியில் இருந்து வயது முதியவர்களும், பெண்களும் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தங்களது பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை ஒன்றை அமைத்து தர வேண்டுமென, பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த கோரிக்கை குறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம் தகவல் தெரிவித்து, உடனடியாக சயனபுரம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில், பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்களிடம், தகவல் தெரிவித்தவுடன் அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை உடனடியாக தொடர்பு கொண்டு, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், சயனபுரம் காலனி பொதுமக்களின் 10 ஆண்டுகால கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அப்பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவு கடிதத்தினை, ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர், பவானி வடிவேலு அவர்களும் பொதுமக்களிடம் வழங்கினர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர். ச. வளர்மதி, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்.பவானி வடிவேலு மற்றும் ஒன்றியக்குழு துணைப் பெருந்தலைவர். தீனதயாளன் அவர்களுக்கும், மக்கள் மனதார மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக