கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் குறிஞ்சிப்பாடி தேமுதிக மேற்கு ஒன்றிய  செயலாளர் வேல்முருகன் தலைமையில் ,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேமுதிக கொடியேற்றப்பட்டது நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளருமான சிவக்கொழுந்து அவர்கள் தேமுதிக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் வடக்கு மேலூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட பொருளாளர் AP ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே. எழிலரசன். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோ சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கேப்டன் சிவா, M.நடராஜன், பிரபாகரன், S.R சதீஷ்குமார், சிவா மாவட்ட பிரதிநிதி சக்திவேல் கிளை நிர்வாகிகள் எஸ்.ஜோதி, ஐயப்பன், கனகராஜ், சந்தோஷ் குமார், குமார், வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad