திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர வார்டு 33 பசுமை நகர் பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 5.50 லட்சம் மதிப்பீட்டில் 114m நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்திடவும்,7m நீளத்திற்கு சிறுபாலம் அமைத்திடவும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு சார்பில் உதவி பொறியாளர் ஜெயக்குமார், மேலும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரசு, நகர மன்ற உறுப்பினர் LION S கோபிநாத், மற்றும் நிர்வாகிகள் தேவன், பிரகாஷ், தயாள் பிரசாத், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்களை அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக