5 ஆண்டில் அபார சாதனைகள் விவசாயிளுக்கு கை கொடுத்த கப்பச்சிவினோத் அனைத்து தரப்பும் பாராட்டு
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தில் இருந்து 170 ஆயிரமாக உயர்ந்து வரலாற்று சாதனை
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத் தொகை ரூ.445.35 கோடியிலிருந்து ரூ.619.25 கோடியாக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார்.
மேலாண்மை இயக்குநர் முத்துசிதம்பரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தலைவர் கப்பச்சி வினோத் பேசியதாவது, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கடந்த 2018ம் ஆண்டு
பொறுப்பேற்றது. கடந்த 5 ஆண்டுகள் முன்னேற்ற பாதையதில் கொண்டுச் செல்லப்பட்டது. தற்போது வங்கியின் வைப்புத் தொகை ரூ.445.35 கோடியிலிருந்து ரூ.619.25 கோடியாக உயர்ந்துள்ளது.
கடன் நிலுவை ரூ.414.63 கோடியில் இருந்து ரூ.858.63 கோடியாக உயர்ந்துள்ளது
. என்பிஏ., 5 சதவிதத்திற்கு குறைவாக கொண்டுவரப்பட்ருள்ளது. மகளிர் சுய உதவிகுழு கடன் ரூ.40 கோடியில் இருந்து ரூ.110.00 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் பேங்கிங், வங்கி கிளைகளில் ஏடிஎம்., பேடிஎம்., ஜி பே, யுபிஐ., மற்றும் QR CODE போன்ற தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கி முதல் முறையாக விவசாய பெருங்குடி மக்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கொரானா காலத்தில் நீலகிரி மாவட்டமே முடங்கியிருந்த நிலையில் நீலகிரி மாவட்ட
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதிய வங்கியியல் சேவையாற்றி மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் மற்றும் வங்கியின் வளர்ச்சிக்காகவும் நமது நிர்வாககுழு உறுதுணையாக இருந்தது
. பயிர் கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தப்பட்டுள்ளது
. கடந்த ஐந்து ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அதிகளவில் கடன் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.1.73 கோடியிலிருந்து ரூ.4.67 கோடியாக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தில் இருந்து 170 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுபோன்று பல்வேறு திட்டங்கள் வங்கியின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு என்னுடன் உறுதுணையாக இருந்த நிர்வாக குழு உறுப்பினர்கள், வங்கியின் மேலாண்மை இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்
கப்பச்சிவினோத் அவர்களின் தலைமையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் அபாரசாதனைகள் நிகழ்த்த பட்டு உள்ளது விவசாயிகள் மறுமலர்ச்சி அடைந்துள்ளனர்
இளைஞர்கள்,வியாபாரிகள்,மகளீர் குழுவினர் என அனைத்து தரப்பினரும் பெரும் பயன் பெற்று தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்
தொடர்ந்து, அனைத்து இயக்குநர்களும் கவுரவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹேம்சந்த், குலோப்ஜான், நிர்மல்சந்த், பீமன், கிருஷ்ணன் கம்பட்டன், வனிதா, நிஷாந்தி மற்றும் வங்கி மேலாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக