அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா! திருப்பூரில் அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் புதிய கிளை அலுவலகம் மகளிர் அணி தலைவி திருமதி எல், மஞ்சுளா தலைமையில் சங்க நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து சங்க கொடியேற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பு உரையாற்றினார். தனது உரையில் அவர் தொழிலாளர்கள் அவர்களது வாழ்க்கை முறையினை திட்டமிட்டு வகுத்துக் கொள்ள வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக ஆடம்பர செலவுகள் செய்யாமல் சிக்கனமாக செலவு செய்து சம்பள பணத்திலிருந்து சேமிப்பு தொகை எடுத்து வைத்து பிற்காலத்தில் உதவும் படி சேமித்து வைக்க வேண்டும். என்றும் சங்கத்தின் எதிர்காலம் பற்றியும் சங்கத்தின் செயல்பாடுகள்,,, வளர்ச்சி பற்றியும், பொறுப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றியும், பல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினார். மேலும் சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் உரையாற்றினர்.இந்த நிகழ்சியில் கிளை நிர்வாகிகளும் மற்றும் ,மாநில , மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக