நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) வருகிறாா். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) வருகிறாா்.


 நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) வருகிறாா். இதையொட்டி வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு தலைமையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மசினகுடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமைப் பாா்வையிட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை வருகிறாா். அங்கு, ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளாா். பின்னா் யானைகள் வளா்ப்பு முகாமைப் பாா்வையிடும் குடியரசுத் தலைவா், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களையும் சந்திக்க உள்ளாா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பாா்வையிட உள்ளாா்.


குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆலோசிக்க தமிழக அரசின் வனத் துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹு தலைமையில் யானைகள் முகாமில் உள்ள கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் சா.ப. அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், வனத் துறை உயா் அதிகாரி ஸ்ரீனிவாச ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் உட்பட அரசு உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.


இந்நிலையில் குடியரசுத் தலைவா் மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டா் மூலம் வருவதால் மசினகுடி - மைசூா் இடையே ஹெலிகாப்டா் பயண ஒத்திகை நடத்தப்பட்டது. பாதுகாப்புக்காக தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாம் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முகாமைச் சுற்றி மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். வனப் பகுதிகளில் க்யூ பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.


குடியரசுத் தலைவா் வருகையை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகப் பகுதி ஐந்து அடுக்கு உயா் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad