திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முகாம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரியின் சேர்மன் எம். எஸ். ஷா தலைமையில் நடைபெற்றது. கல்விக் குழும பொருளாளர் சகிலா முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் அப்துல் காதர் வரவேற்பு உரையாற்றினார்.
அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, முன்னாள் முதல்வர் நவராஜ், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன் உட்பட பல பங்கேற்றனர் இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தடை அறிவியல் துறை ஆகியவற்றிற்காக மாணவர்கள் சேர்க்கையை முகாம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக