தூத்துக்குடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனிமய மாதா கோயில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரெயில் (01144) அதிகாலை 4 மணிக்கு புறப்படுகிறது.
இந்த ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படுகிறது.
மாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 8.20 மணிக்கு தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயிலும் (06002), இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடி - ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் சேவையை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக