சின்னசேலம் அருகே மேலூர் கிராம கோவில் திருவிழாவில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடியவர் உள்பட நான்கு நபர்களை கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
நேற்று 04.08.2023-ந் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்த உத்தரவையும் மீறி ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஆபாசமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும், பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும் நடனமாடியதால் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆபாச நடனம் ஆடுவதை நிறுத்தச் சொல்லியபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 1)ராமன்(48) த/பெ குமாரசாமி, மேலூர் கிராமம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 2)மதன் @ மணிவண்ணன்(32) த/பெ தங்கவேல், விளம்பார் கிராமம், மேடையில் ஆபாச நடனமாடிய 3)தொல்காப்பியன்(22) த/பெ குமார், நல்லாத்தூர் கிராமம் மற்றும் 4)பிரபாகரன்(41) த/பெ சேகர், எரவார் கிராமம் ஆகியோர் சேர்ந்து அப்படித்தான் ஆபாசமாக நடனம் ஆடுவார்கள் எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என கூறி உதவி ஆய்வாளரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து நான்கு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஆபாசமாகவோ, அறுவறுக்கத்தக்க வகையிலோ பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலோ ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக