புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடை பெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடை பெற்றது.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடை பெற்றது.

கணேசர் கலை அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், நேரு யுவகேந்திரா,  பிரபஞ்சம் அறக்கட்டளை இணைந்து நீர் மேலாண்மைக் கருத்தரங்கினை நடத்தியது.

கல்லூரி முதல்வர் முனைவர் வே.அ.பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் 
பிரபஞ்சம் அறக்கட்டளை நாராயணசாமி ராஜு வரவேற்புரையாற்றினார். 

பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் நோக்கவுரை வழங்கினார்.
பேராசிரியர்கள் பொன்.கதிரேசன்
கதி.முருகேசன், பெரிய.அழகம்மை, 
வாழ்த்துரை வழங்கினர். 

புதுக்கோட்டை மாவட்ட  இளையோர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் முனைவர் கு.தயாநிதி 
இன்றைய காலகட்டத்தில் மழை நீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடினார்.
நிறைவாக கருப்பையா நன்றியுரை கூறினார். 

 பேராசிரியர்கள், மாணவர்கள்,பிரபஞ்சம் இளையோர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.

இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் சிபூ.முடியரசன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad