பாலமேடு பேரூராட்சியில் 77 வது சுதந்திர தின விழா - பேரூராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பாலமேடு பேரூராட்சியில் 77 வது சுதந்திர தின விழா - பேரூராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றினார்.

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி வளாகத்தில் 77வது சுதந்திர தின விழாவையொட்டி பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் அங்குள்ள தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் டெங்கு நோய் தடுப்பு, பிளாஸ்டிக் நோய் தடுப்பு, குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 



இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ், திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் தேவி, வரித்தண்டலர் கிரன் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர் உடனிருந்தனர். தொடர்ந்து பேரூராட்சி சார்பில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad