தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களான தெய்வம் மகன் இசக்கி (51) மற்றும் சுப்பையா மகன் மூக்காண்டி (39) ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 11.08.2023 அன்று மேற்படி இசக்கியின் வீட்டின் அருகில் மது அருந்தி கொண்டிருந்தபோது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மூக்காண்டி, இசக்கியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை வழக்குபதிவு செய்து மூக்காண்டியை கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட மூக்காண்டி என்ற நபர் மீது மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக