இரணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

இரணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

76 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் பெ. வடிவேலு அவர்கள் தொடங்கி வைப்பு!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தில் 76 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், மீனாட்சி நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் த.மு.மு.க நெமிலி ஒன்றிய தலைவர். கே. பிலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். 


இந்த மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண், காது, மூக்கு, தொண்டை, தோல், எலும்பு, மூட்டு, பெண்கள் மருத்துவம், குழந்தை மருத்துவம், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் மூட்டு மற்றும் இருதய அறுவை சிகிச்சை புற்றுநோய் கட்டிகள் நீக்கும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். 



இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், த.மு.மு.க மாவட்ட தலைவர் ஜனாப் முகமத்ஹலி, மாவட்ட செயலாளர். இம்ரானுல்ஹக், புட்டுஇர்பன், மாவட்ட பொருளாளர். கிஷோர்ஹலி, நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர். மாறன், பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர். கவிதா சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர். அருண், முகாம் மருத்துவர்கள். மருத்துவர் ராஜசேகர், மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள். வெங்கடேசன், பிரதீப் குமார் மற்றும் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.



- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad