தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாற்றத்தைதேடி விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாற்றத்தைதேடி விழிப்புணர்வு

நாசரேத், சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி இன்று 21.08.2023 திங்கள் கிழமை, நாசரேத் காவல்துறையினரால் "மாற்றத்தை தேடி" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் நாசரேத் உதவி ஆய்வாளர் எபநேசர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், லைசன்ஸ் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ய கூடாது. மது போதைக்கு யாரும் அடிமை ஆகக்கூடாது. கல்வி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். இனம் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவை உண்ணக்கூடாது எனப் பல விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன், முதல்வர் ஜான்சி பியூலா ஜாய்ஸ் முன்னிலை கனகராஜ், உதவி முதல்வர் பியூலா வகித்தனர். தலைமை காவலர் ஃபிரீடா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஏற்பாட்டை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் தேசிய கீதம் முழங்க விழா இனிதே முடிவடைந்தது.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad