நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11.8.2023 அன்று மாணவர்களுக்கு போதையால் ஏற்படும் தீமைகள் பற்றி கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கொளரவ தலைவர் திரு. பசுவராஜ் அவர்களும் பொதுச்செயலாளர். திரு. பாலகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் திரு S.சுந்தரராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. ராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் பள்ளி இருபால் ஆசிரியர்கள் சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் திரு. வேலுச்சாமி அவர்கள் காவலர்களுடன் பேரணி நடத்திவரப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கி, நுகர்வோர் குடி உரிமை மன்ற மாணவர்களுக்கு கோத்தகிரி நுகர்வோர் சங்கத்தின் சார்பாக துணைத் தலைவர் S.சுந்தரராஜ் இலவசமாக குடி உரிமை மன்ற அடையாள அட்டை வழங்கினார். இறுதியில் பள்ளி நுகர்வோர் மற்ற பொறுப்பு ஆசிரியர் திரு. சுரேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி நீலகிரி மாவட்ட செய்திப் பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக