கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் எம்பி இராகுல்காந்தி அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது...
காங்கிரஸ் எம்பி இராகுல்காந்தி அவர்கள் வயநாடு செல்வதற்காக
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தந்து அங்கிருந்து கார் மூலமாக உதகை வந்து தோடர் பழங்குடியின மக்களை சந்திந்தார். தொடர்ந்து வயநாடு செல்ல கூடலூர் வழியாக வருகை புரிந்தார். அப்போது கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக எம்பி இராகுல்காந்தி அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி மேள தாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இதேபோல் தேவர்சோலை, பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து தேவர்சோலை வழியாக பத்தேரி சென்று அங்கிருந்து வயநாடு கல்பட்டா பகுதியில் உள்ள பொது மேடையில் சிறப்புரைமாற்ற புறப்பட்டார்.இவர் செல்லும் வழியே மக்கள் உற்சாக வரவேற்று கொடுக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக