திருப்பூரில் தமிழ்நாடு ஆளுநரை நீக்க கோரி மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் கையெழுத்து வேட்டை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் தமிழ்நாடு ஆளுநரை நீக்க கோரி மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் கையெழுத்து வேட்டை.

திருப்பூரில் 1,55000 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆளுநராக ஆர் எம் ரவி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவரை நீக்கக்கோரி இந்திய குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்ளும் விதமாக பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை மதிமுக தொடங்கியது. 



இந்த நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மதிமுக R.நாகராஜன் தலைமையில் மதிமுகவினர் பம்பரமாக சுழன்று பொதுமக்களிடம் ஒரு லட்சத்தி 55 ஆயிரம் கையெழுத்து வாங்கினார்கள். கையெழுத்துகள் அடங்கிய விண்ணப்பங்களை மாநில மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 



இந்த விழாவில் கையெழுத்து பெற்ற விண்ணப்பங்களை மாநில அவைத்தலைவரிடம் மாநகர் மாவட்ட செயலாளர் R.நாகராசன் mc., ஒப்படைத்தார் இந்த நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பகுதி மதிமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், செயலாளர்கள் ,மகளிர் அணியினர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். 


இந்த கையெழுத்து இயக்கம் வெற்றி பெற பொதுமக்களிடம் கையெழுத்து பெற உதவிய அனைத்து மாநகர நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாக மாநகர் மாவட்ட செயலாளர் மதிமுக R.நாகராஜன் mc தெரிவித்தார் 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/