கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தொடங்கி வைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையை பெரிய ஜோகி பட்டி கிராமத்தில் இருக்கும் திமுக கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை உதாரணமாக 8 மணிக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று அரசு ஆணை இட்டுஉள்ளது ஆனால் கட்சி நிர்வாகிகள் சுமார் 9 மணிக்கு தான் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வருகிறார்கள் எந்த ஒரு திட்டம் தமிழக அரசு அறிவித்தாலும் இப்பள்ளியில் இதைப் பற்றி தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தால் மிகவும் காலதாமலமாக வருகிறார்கள் இதை உடனடியாக கட்சி தலைமை அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி கட்சியின் அரசுநிகழ்ச்சிகளை தாமதம் இன்றி பணி நடத்த முடிவு செய்ய வேண்டும் என்பது இங்கு பள்ளியில் படிக்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் கட்சி விழா என்பது கட்சிக்கு சம்பந்தப்பட்ட வேலையாகும் ஆனால் இங்கு இருக்கும் கட்சி தொண்டர்கள் தங்களது சொந்த விழா என்று மிகவும் தாமதமாக வந்து செயல்படுத்தி வருகிறார்கள் இதனால் பொதுமக்களும் பாதிப்பு உள்ளார்கள் (பசி) என்று பிள்ளைகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் எனவே இது போன்ற தவறுகள் இனி நடக்க கூடாது என்று தலைமை இவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தும் இங்கு பயிலும்மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது உடனடியாக கட்சி திமுக தலைமை இவர்களை அழைத்து ஆலோசனை வழங்குவார்களா????
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்எ ஸ் சத்தியநாராயணன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக