நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. இவ்வாறு பெய்யும் மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கபடுவது மட்டுமல்லாமல் மண் சரிவும் ஏற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே தொண்டியாளம் பகுதியில் பாலவாடி செல்லும் வழியில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்தது சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக