விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் முயற்சியாக டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர், திண்டிவனம் அருகில் கோட்டகுப்பம் மற்றும் ஒலக்கூர் காட்டுப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு நடந்தது. போலீசாரும் காட்டுப்பகுதிக்குள் அனுப்பப்பட்டனர். அப்பகுதியில் மது அருந்து கொண்டு இருந்தவர்கள் மற்றும் பணம் வைத்த சூதாடியவர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பினார்.
தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஆட்சிக்குப்பம் பகுதியில் சாராயம் விற்று கொண்டிருந்த ஜெயகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர் மேலும் அவர் வைத்திருந்த சாராயத்தினை அழித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக