பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
நேற்று 01.08.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட திருபாலபந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருபாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.தனசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாபு அந்தோணி முத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த TN 91 E 9412 என்ற பதிவெண்கொண்ட டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சங்கராபுரம் வட்டம், விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார்(35) என்பவர் சுமார் 50,000/- மதிப்புடைய 270 பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வரும் போது காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மற்றும் கடத்த பயன்படுத்திய டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் கடத்தி சென்றலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக