மக்கள் நலபணிகளில் சாதனை படைக்கும் கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீீதாசிவமணிக்கு மக்களுக்காக அறக்கட்டளையின் சாதனையாளர் விருது கடநாடு ஊராட்சி (Kadanad Gram Panchayat), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடநாடு ஊராட்சி, குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தல் மற்றும் உள்ளூர் கழிவுகளை பதப்படுத்துதல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு, கழிவு மேலாண்மை துறையில் வரவேற்கத்தக்க முன்னுதாரணமாக திகழ்கிறது.
குடியிருப்பாளர்கள் குடியிருப்புகளில் திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவதில்லை, இந்த ஊராட்சியின் தலைவராக சங்கீதாசிவமணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், மக்களின் தேவைகளை அறிந்து அவைகளை சிறப்பாக செய்து வருகிறார், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களில் ஊராட்சி மன்ற பொது நிதி மூலம் சுமார் நாற்பது இலட்சம் மதிப்பீட்டிலும், 15 ஆவது நிதியின் மூலம் சுமார் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலபணிகள் மிக சிறப்பாக செய்துள்ளார்.
அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் எழுபத்தி ஆறு இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி உள்ளார், குறிப்பாக கடநாடு ஊராட்சிக்குட்பட்ட சின்ன குன்னூர் கோணகட்டி குக்கிராமத்தில் கிணறு முதல் GLR வரை புதிதாக குடிநீர் இணைப்பு சுமார் 500000.00 மதிப்பிலும் சின்ன குன்னூர் கோக்குடல் குக்கிராமத்தில் Well முதல் GLR வரை புதிதாக குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளார்.
மாவுக்கல் குக்கிராமத்தில் புதிதாக நடைபாதை அமைத்து கொடுத்துள்ளார், கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களிடமும் பாராட்டு பெற்று மக்கள் நலபணிகளில் சாதனை படைத்து வரும் கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீீதாசிவமணிக்கு மக்களுக்காக அறக்கட்டளையின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனர் நாள் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறக்கட்டளை நிறுவனதலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமையில் ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.கே.பி.அருண் இந்த சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டினார்
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக