மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி ரூ.11 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி ரூ.11 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது.

ரூ.11 கோடி மதிப்பீட்டில் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி தொடங்கியது. மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச்செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம், புதிய சஷ்டி மண்டபம் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சவாமி கோவில் வளாகத்தில் லட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தததால் அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 


இதையடுத்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. இதேபோல சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சஷ்டி மண்டபம் கட்டவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் சஷ்டி மண்டபம் அமைக்க ரூ.4.50 கோடியும், லட்சுமி சீரமைக்க ரூ.6.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி மற்றும் சஷ்டி மண்டபம் கட்டுமான பணிகளை ரூ.11 கோடி மதிப்பீட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.  


இதனைத் தொடர்ந்து கோவில் திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பரங் குன்றம் கோவில் துணை ஆணையாளர் சுரேஷ், ஸ்தானிகப்பட்டர்கள் சுவாமிநாதன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி லட்டு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், துணைச் செயலாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad