மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்படும். ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்படும். ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விளம்பர லோகோவை இரு சக்கர வாகனங்களில் பொருத்தும் நிகழ்ச்சி அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர் (தெற்கு)மேற்கு ஒன்றியம் குமா ரத்தில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமை யில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப் பட்டது. அதனை தொடர்ந்து 35 ஏக்கர், அதனைத் தொடர்ந்து 65 ஏக்கரில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 


இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசரமாக தயாரிக்க கூடாது, சாதம் குழைவாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயைப் போல எங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார். அதேபோல் வருப வர்களுக்கு சுகாதாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. தற்போது வாகனங்களை நிறுத்த மட்டும் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது. அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்க ளுக்கு இடையூறு ஏற்படால் இருக்கும் வகையில் மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப் படுகிறது. மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகி களுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கவுரவிக்கிறார். இந்த மாநாட்டில் காலையில் மாநாட்டு பந்தலில் எடப்பாடியார் கட்சி கொடியினை ஏற்றும்போது தொண்டர் படைகள் ராணுவ சிப்பாய்கள் போல் மரியாதை அளிக்கிறார்கள். 


ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் தனது தந்தையார் புகழை பரப்புவதற்கும், கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கும் தான் உழைத்து வருகிறார். தமிழகத்தில் பள்ளிகளில் சாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது. இது வேதனை தரும் விஷயமாகும். மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை நேரில் பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயி களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல மைச்சருக்கு நேரமில்லை. சட்டமன்றத்தில் அம்மா வுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக வெளியிட்டுள்ளார். ஆனால் ஸ்டாலின் இதில் பச்சை பொய் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad