நீலகிரி மாவட்டத்தில் ஜெ எஸ் எஸ் மருந்தாக்கவியல் கல்லூரி தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை சார்பில் ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் ஜெ எஸ் எஸ் மருந்தாக்கவியல் கல்லூரி தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை சார்பில் ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்


ஜெ எஸ் எஸ் மருந்தாக்கவியல் கல்லூரி தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை சார்பில் ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 


நீலகிரி மாவட்டம், சொக்கநல்லி ஆதிவாசி கிராமத்தில் மக்களுக்காக  அறக்கட்டளையால் நடத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது


இதில்   தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை, ஜெ எஸ் எஸ் மருந்தாக்கவியல் கல்லூரி சார்பில் உடல்நலம் மற்றும் மனநலம் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்த பட்டது 


கல்லூரியின்  துணை முதல்வர் கே. பி. அருண், கல்லூரி. பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.  


துணை முதல்வர் கே. பி. அருண் முன்னுரை ஆற்றினார். தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர். சண்முகம் ராமசுவாமி மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  


முனைவர். கிருஷ்ணவேணி இரத்தசோகை குறித்து பேசினார். மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை முனைவர். தீபலெட்சுமி மற்றும் முனைவர். பிரியங்கா ஏற்படுத்தினர். 


முனைவர் கோமதி சுவாமிநாதன் மனநலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்


. இந்த விழாவில் இணை பேராசிரியர் முனைவர் சத்யநாராயணா ரெட்டி மற்றும் ஆய்வு மாணவிகள் யமுனா மற்றும் மிருணாளினி, அலுவலக உதவியாளர் நாகராஜ் கலந்து கொண்டனர். 


ஆதவாசிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரியின் பேராசிரியர்களை ஊர் மக்கள் மற்றும் மக்களுக்காக அறக்கட்டளையின் தலைவர் திரு தமிழ்வெங்கடேசன் ஆகியோர் பாராட்டினார்கள்.


அப்பகுதி ஆதிவாசி மக்கள் இந்த விழிப்புணர்வு முகாம் தங்களுக்கு பெரும் பயன் உள்ளதாக அமைந்ததாக மகிழ்சியுடன் கூறினர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad