நீலகிரி - தமிழ்நாட்டில் எங்கள் மண் ,எங்கள் நாடு என உலா வரும் நபருக்கு எச்சரிக்கை விடுத்த ஆ.இராசா .. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நீலகிரி - தமிழ்நாட்டில் எங்கள் மண் ,எங்கள் நாடு என உலா வரும் நபருக்கு எச்சரிக்கை விடுத்த ஆ.இராசா ..

 


தமிழ்நாட்டில் எங்கள் மண் ,எங்கள் நாடு என உலா வரும் நபருக்கு எச்சரிக்கை விடுத்த ஆ.இராசா .. 



தமிழ்நாடு உங்கள் மண்ணும் இல்லை, உங்கள் நாடும் இல்லை ... தமிழ்நாட்டு மண்ணில் தமிழ் எங்கள் அடையாளம், திராவிட மொழி மற்றும் இந்தியா என்று உணர்வு எங்கள் அனைவரிடமும் உள்ளது. மத வெறியை தூண்டும் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ஆ. இராசா காட்டம் ...



நீலகிரி மாவட்டம் உதகையில் நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் காந்தல் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூணை திறந்து வைத்த திமுக துணை பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் திமுக கொடியை ஏற்றி வைத்தார். 



இதன்பின் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆ.இராசா ,கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்ற 500  மலை கிராம பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



அப்போது பெண்கள் மத்தியில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பேசுகையில் கூறியதாவது :- நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் மைக்கை Off செய்து ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் அளவிற்கு பாஜக ஆட்சியில் மதவெறி உச்சக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 



இல்லையென்றால் இந்த தேசம் தேசமாக இருக்காது என எச்சரித்த ஆ.இராசா ,மணிப்பூரில் தொடங்கிய மத வெறி, சாதி வெறி எதிர்காலத்தில் தமிழ்நாடு வரை வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என எச்சரித்தார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திராவிட மொழிகளைக் கொண்ட ஆட்சி நடைபெறுவதாகவும் திராவிடம் மதத்திற்கும், சாதிக்கும் எதிரானது. மனிதன் மனிதனை நேசிப்பதும் தமிழ்நாடு விட்டுக் கொடுக்காது என்பதை வடநாட்டு மக்கள் தற்போது அறிந்து கொண்டுள்ளதாகவும் இதை உருவாக்கிய பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் திராவிட நாடுகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.



நாட்டு மக்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்ற பாசிச சக்தியை வீட்டுக்கு அனுப்பி நடைபெறும் தேர்தலில் மதம், சாதியைத் தாண்டி இந்தியர்களாக ஒன்றிணை வேண்டுமென கூறினார்.



 தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க எங்கள் மண், எங்கள் நாடு என உங்கள் பகுதிக்கு உலா வரும் நபர்களுக்கு சொல்லுங்கள் தமிழ்நாடு உங்கள் மண் இல்லை, உங்கள் நாடும் இல்லை ..தமிழ்நாடு எங்கள் மொழி, எங்கள் இந்திய நாடு இந்த மண்ணில் திராவிட மொழியே அடையாளம், இந்தியா என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் உள்ளது என்பதை குறிப்பிட்ட ஆ.ராசா.  நடைப்பயணம் என்ற பெயரில் மத வெறியை கிளரும் நபர்களுக்கு ஆ இராசா கண்டனம் தெரிவித்தார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர். கா. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad