ராணிப்பேட்டை ஆற்காடு ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது, இந்த விழாவில் 50 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் அருமையும் பெருமையும் பற்றியும் ,தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தை பற்றியும், தாய்ப்பால் கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சுத்தமாக இருத்தல், தாய்ப்பாலின் பயன்கள், தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கும் தாய்க்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் Dr.சங்கீதா மக்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் விளக்கம் அளித்தார்.
இந்த விழாவிற்கு தலைவர் Rtn.D.வீரபாண்டியன் தலைமை தாங்கினார், ஆற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் Dr.சிவசங்கரி, செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் சங்கத்தின் சார்பாக முன்னாள் தலைவர்கள் Rtn.PP.M.அசாதுல்லா Rtn.PP.K.பூபாலன், Rtn.A.இறைமொழி உறுப்பினர் Rtn.R.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர், விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருளாக பிரட், பிஸ்கட், பழம் ஆகியவை வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக