கன்னியாகுமரி மாவட்டம் இடலாகுடி அருகே பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது- தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்டம் இடலாகுடி அருகே பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது- தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.


கன்னியாகுமரி மாவட்டம் இடலாகுடி அருகே பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது- தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்

.
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 


இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். 


பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.
இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 



அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. 


புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad