தூத்துக்குடி - வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.

தூத்துக்குடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று (02.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரிய அந்தோனி ஆக்னல் (எ) ஆக்னல் (23) என்பதும், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரியான மரிய அந்தோணி ஆக்னல் (எ) ஆக்னல் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி ஆக்னல் (எ) ஆக்னல் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை, கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad