தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஆத்தூரான் கால்வாய்க்கு ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளிடம் அரசு தரப்பில் திருச்செந்தூரில் பேச்சுவார்த்தை நடந்தது. மீண்டும் நேற்று 02.08.2023 இரவு ஆர்டிஓ தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாய சங்கம் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று 03.08.2023 ஆத்தூரில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும், மறியல் போராட்டத்திற்காக விவசாயிகள் பலர் திரண்டுள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக