கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது, இன்று 03.08.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். 


நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் கடந்த ஜூலை மாதத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ், காவல் ஆய்வாளர் திரு.அசோகன், உதவி ஆய்வாளர்கள் திரு.சத்தியசிலன், திரு.திருமாள், திரு.அலெக்ஸ், திரு.அன்பழகன், காவல் ஆளினர்கள் பாலசுப்ரமணியம், மணிகண்டபெருமாள், மதுரைவீரன், ராஜா, ஷோபா, இரஞ்சனி, வீரப்பன், பாஸ்கரன், மணிமாறன், விக்ரம் வாசு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவலர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். 


இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மணிகண்டன், திரு.சங்கர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad