திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள திமுக அலுவகத்தில் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்துகொண்டு நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு, ஆளுநரைக் கண்டித்து நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்ட தலைநகரான திருப்பத்தூரில் நடத்துவதென்றும், இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டு ஒன்றிய பிஜேபி அரசிற்கும், ஆளுநருக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் நா.சங்கர் மற்றும் மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக