குடியாத்தம் நகராட்சியில் பேனர் உரிமை யாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

குடியாத்தம் நகராட்சியில் பேனர் உரிமை யாளர்களின் ஆலோசனைக் கூட்டம் !

குடியாத்தம் நகராட்சியில்  பேனர் உரிமை யாளர்களின்  ஆலோசனைக்  கூட்டம் !
குடியாத்தம் , ஜன 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 
பகுதியில் 10 அடிக்கு 10 அடி  அளவில் மட்டுமே டிஜிட்டல் பேனர்கள்  வைக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது  குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர்,டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது  இக் கூட்டத்தில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன்,நகரகாவல் ஆய்வாளர்   ருக்மாங்கதன், போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் முகேஷ்குமார். நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இந்தக் கூட்டத்தில் பேனர்கள் வைப்பவர் கள் முக்கிய இடங்களான குடியாத்தம் புதிய பஸ் நிலையம்,பழைய பஸ் நிலையம்,காமராஜர் பாலம்,புதிய பைபாஸ் சாலை,நேதாஜி சவுக்,காந்தி சவுக், காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கண்டிப்பாக பேனர் வைக்க அனுமதி இல்லை பேனர் வைக்க மூன்று நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்,இந்த பேனர் கள் 10 அடிக்கு 10 அடி என்ற அளவில் மட்டுமே இருத்தல் வேண்டும்,பேனர் வைக்க ஒரு பேனருக்கு 500 ரூபாய் அனுமதி கட்டணமாக நகராட்சிக்கு செலுத்திய பின் நகர காவல் நிலையத் தில் அனுமதி பெற்ற பின்னரே பேனர் வைக்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டதது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad