திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ் கட்டிட தொழிலாளி. இவர் இன்று மாலை கட்டிட வேலைகளை முடித்துவிட்டு இவரது ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கருக்காம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது அசுர வேகத்தில் வந்த கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த இளைஞர்கள் சூரியபிரகாஷ், ஜாபர், இப்ராஹிம் ஆகியோர் வந்த இருசக்கர வாகனமும் காளிதாஸ் என்பவரின் இரு சக்கர வாகனமும் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் உடல் நசுங்கி காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் காளிதாஸ் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணன் மற்றும் இளைஞர்கள் மாணவர்களான சூரியபிரகாஷ், ஜாபர், இப்ராஹிம் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த 108 ஊழியர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக