மத்திய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், உள்ளூர் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் துவக்க விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தவிர மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு போதிய இடம் கொடுக்கப்படவில்லை. சிறிய பத்திரிகை செய்தியாளர்களை லெட்டர் பேட் பத்திரிகையாளர் என கிண்டல் அடித்தனர். சிறிய பத்திரிக்கை செய்தியாளர்களை காவல்துறையினரும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் மதிப்பளித்த போதும் அருங்காட்சிய ஊழியர்களோ அகழ்வாராய்ச்சி துவக்க விழா ஏற்பாட்டினாரோ பத்திரிக்கையாளர்களுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் மதிப்பளிக்கப்படவில்லை.
அரசியல் பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடமும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இவ்வளவு ஏன் மாவட்ட P.R.O க்கும் மதிப்பளிக்கப்படவில்லை. பொதுமக்களும் பார்வையாளர்களும் இருக்கும் இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறு பகுதியை வெறும் பத்து இருக்கைகள் கொண்ட இடத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக