நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலப்பெருவிளை வடக்கு ஆற்றங்கரை பகுதியினருக்கு மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல அரசியல் சூழ்ச்சிகளால் இப்பகுதி மட்டும் புறந்தள்ளப்பட்டுள்ளது.
சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்
நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் "நாளை செய்து தருகிறோம், மறுநாள் செய்து தருகிறோம்" என சமாளித்துகூறி செய்துதராமல் அவர்கள் கடமையுணர்வின்றி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுகின்றனர்.
இப்பகுதி கடந்த 07-12-2021 அன்று GO. No.120/2021- ன் படி ஆளூர் பஞ்சாயத்திலிருந்து நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்ட நாளிலிருந்து குடிநீர் பற்றாக்குறை உட்பட அனைத்து அடிப்படை தேவைகள் இப்பகுதி பொதுமக்களுக்கு கிடைக்காத ஏமாற்ற நிலையும் மாநகராட்சி அதிகாரிகளின் அலைக்கழிப்பும் தொடர்ந்து நீடிக்கிறது.
குடிநீர் வழங்குவதற்கு ஏற்றார்போல் அருகிலேயே பயன்படுத்தப்படாத அரசின் கிணறு, போர்வெல் மற்றும் எலக்ட்ரிக்போர்டு போன்ற அனைத்து உபகரணங்களுடனான வசதியும் இருந்தும் அவற்றை பொருட்படுத்தாமல் மாநகராட்சி குடிநீர் தர மறுப்பு, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் உட்பட அனைவருக்கும் வேற்றுமையின்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது, ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு மட்டும் மேற்படி அடிப்படை வசதிகள் பறிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுவரும் பொதுமக்கள் வேதனை.
இப்பகுதி சாலையை முறைப்படி செப்பனிட்டு சாலை வசதி செய்துத்தராமல் புல் மற்றும் புதர்களுடன் சுகாதாரமின்றி காணப்படுவதால், அன்றாட போக்குவரத்துக்கு இடையூராகவும், சிறுக்குழந்தைகள் உள்ள வீடுகளில் பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் புகுந்து உயிர் ஆபத்தை ஏற்படுத்தியும் வருகின்றன.
மாநகராட்சியின் பல வார்டுகளில் புதிய போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு எல்லாவிதத்திலும் மாநகராட்சியால் செய்துதர வசதி வாய்பும் இருந்தும் தண்ணீர் தர மறுத்து வருகின்றனர். இவ்வாறாக பழிவாங்கும் நோக்கத்தோடு இப்பகுதி மாமன்ற உறுப்பினரும் செய்துவருகிறதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
மாநகராட்சி ஊழியர்கள் மேற்படி தேவைப்படும் அடிப்படை வசதிக்கான வேலைகளை செய்ய முற்பட்டாலும் அவர்களை 3-வது வார்டு கவுன்சிலரின் கணவர் 'Acting Councelor'-ஆக தொடர்ந்து இடைதரகராக செயல்பட்டு அரசுப்பணி செய்வோரை தடுத்து நிறுத்தி பலவிதங்களில் மிரட்டுவதும் பொதுமக்களுக்கு இடையூராக செயல்படுவதும் வழக்கமாகும். அவ்வாறான அவர்களது துற்செயல்களை காரணம் காட்டி மாநகராட்சி நிர்வாகமும் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்துதராமல் இப்பகுதி மக்கள் மட்டும் புறந்தள்ளப்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாநகராட்சியில் இணைத்து அனைத்துவித வரிச்சுமைகளையும் அதிகப்படுத்தியதுடன் அடிப்படை வசதியேதும் வழங்காமல் கஷ்டப்படுத்தி ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக, முன்பு இருந்ததைப்போல பேரூராட்சியில் இணைத்து நிம்மதியாக வாழவிடுங்கள் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பல வார்டுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வருகின்றார்கள்.
ஆனால் இந்த பகுதிகளுக்கு வருவதில்லை எங்களது குறைகளையும் கேட்கப்படாமல் சரிசெய்து தராத சூழ்நிலையில் உள்ளோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள். இத்தகைய அடிப்படை வசதிகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக