முதுமலை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடி பிரதிநிதிகள் 38 பாகன்களை சந்தித்து குறைகளை கேட்டு அனைவருக்கும் பரிசு வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, யானை பாகன் தம்பதி, பழங்குடியினர், யானை பாகன்களை சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று, டில்லியில் இருந்து மைசூரு வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், மாலை 3:30 மணிக்கு மசினகுடி வந்தார்.
அங்கு, அவருக்கு, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து வாகனம் மூலம், மசினகுடி - தெப்பக்காடு சாலை வழியாக, முதுமலை யானைகள் முகாம் வந்து சேர்ந்தார்.
அங்கு வரிசையாக நிறுத்தப்பட்ட வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு நான்கு யானைகளுக்கு கரும்பு கொடுத்தார். தொடர்ந்து, 'ஆஸ்கர்' படத்தில் இடம்பெற்ற யானை குட்டிகள், பாகன் தம்பதி, பழங்குடி பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
பின், அங்கிருந்த 38 பாகன்களை சந்தித்து, 5 பாகன்களிடம் பேசி குறைகளை கேட்டார் . அனைவருக்கும் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்து, மாலை 4.40 மணிக்கு வாகன மூலம், மீண்டும், மசினகுடி சென்று, ஹெலிகாப்டர் மூலம், மைசூரு சென்றார்.
ஜனாதிபதி வருகை முன்னிட்டு, தெப்பக்காடு - மசினகுடி சாலை 2:00 மணிக்கு தற்காலிகமாக- மூடப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுமலை வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ் லையில், வாகனங்கள் தடை இன்றி இயக்கப்பட்டது."
"குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, காவல் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். இதில் தொரப்பள்ளி - தெப்பக்காடு சாலை, பந்திப்பூா் - தெப்பக்காடு - மசினகுடி சாலை பகுதிகளில் அதிரடிப் படையினா், நக்ஸல் தடுப்புப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்."
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக