திருக்கோவிலூர் அருகில் டி எடப்பாளையம் கிராமத்தில் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட துணை சுகாதார நிலையம் கட்டிட வேலையை விரைவாக முடிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கோரிக்கை.
திருக்கோவிலூர் அருகில் டி எடப்பாளையம் கிராமத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் அந்த கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது... கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வந்தார்கள் இந்த நிலையில் துணை சுகாதார நிலைய கட்டிடம் புதிதாக கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடித்தார்கள்.
ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் பணிகள் தொடங்கப்படவில்லை இதனால் அந்த ஊரை சார்ந்த கர்ப்பிணி பெண்கள் இந்த கிராமத்தில் இருந்து தொலைவில் இருக்கும் மேட்டுக்குப்பம் என்ற ஊருக்கு சென்று சிகிச்சை பெரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கருவுற்றிருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் பயணங்களை தவிர்ப்பது எச்சரிக்கையுடன் இருப்பது தான் சிறந்தது ஆனால் வேற வழி இல்லாமல் அனைத்து ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் மருத்துவ தேவைக்காக கர்ப்பிணி பெண்கள் தொலைவில் இருக்கும் மேட்டுக்குப்பம் செல்வதற்கான பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனம் பயணத்தில் பல்வேறு மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு விரைவாக துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளை விரைவாக முடிக்க ஆவன செய்ய வேண்டும்.
அதுவரை எடப்பாளையத்தில் தற்காலிகமாக வேறு இடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
ஏ.பசல் முஹம்மது மாவட்ட தலைவர் மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக