மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தனலெட்சுமி கண்ணன், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டாரவளர்ச்சிஅலுவலர்(நிர்வாகம்)அரிமீனாட்சி வரவேற்றார். கணக்காளர் சங்கர், தீர்மான அறிக்கை வாசித்தார். இந்தகூட்டத்தில், பொதுநிதியிலிருந்து பல்வேறுவளர்ச்சிப்பணித்திட்டங்கள் செயல் படுத்துவது பற்றியும், மராமத்து பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பள்ளிக் கூடக்கட்டிடங்கள் தேர்வுசெய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், கள மேற்பார் வையாளர்கள், வேளாண்மைதுறை, தோட்டக் கலைத்துறை, மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறுதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஊரட்சிகள்) உமா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக