திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு கடந்த 12ம் தேதி போன் ஒன்று வந்துள்ளது அதில் திமுக அமைச்சர் உதவியாளர் பேசுவதாகவும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகிறேன் என்றும் தாங்கள் மாநாடு நடத்த உள்ளதாகவும் அதற்கு பணம் வேண்டும் எனவும் அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் இதில் சந்தேகம் அடைந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் ஐடி பிரிவு தலைமை பொறுப்பாளர் டெலியூஸ் பெர்னாண்டஸ் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போன் செய்து பேசியது யார் என்று விசாரித்து வந்த நிலையில் திமுக அமைச்சர் போலவும் அவரது பிஏ போலவும் குரலை மாற்றி பேசியது திருச்சி மாவட்டம் பாலக்கரை சேர்ந்த முகம்மது ரபீக் என்பதும் அவர் சென்னையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் சென்னையில் பதுங்கி இருந்த முகமது ரஃபீக்கை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிமிருந்து செல்போன் பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெக்ஸ்டைல் நிறுவனத்திடம் அமைச்சர் போல குரலை மாற்றி பேசி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக