கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்குதல் குற்ற புலனாய்வுத் துறை கோவை சரக காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு போலீசார் இன்று பொள்ளாச்சி ஆனைமலை கோட்டூர் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரிசி கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று தணிக்கை செய்தனர்.
மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக