தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அணைந்த பெருமாள் (65) இன்று (27.08.2023) உடல் நலக்குறைவால் காலமானார்.


காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின் படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியநாயகம் மற்றும் போலீசார் இன்று (27.08.2023) அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad