திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு திருவிழா.

கும்பகோணம், திருவிடைமருதூர் வடக்கு வீதியில் ஸ்ரீநாகமகாமாாியம்மன் வாராஹி தேவி திருக்கோயில்  உள்ளது. இங்கு ஆறாம் ஆண்டு  திருவிழாவில், நேற்று சனிக்கிழமை  காலை 8:45 மணியளவில் சக்தி கரகம் எடுத்து வருதல், அபிஷேகம் ஆராதனை அன்னதானம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 


இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . காவிரி புனித தீர்த்தம் சுமந்து,  ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு பொங்கல் வைத்தல்,விசேஷ திரவிய ஹோமம்,பட்டுப் புடவை ஹோமம், பூர்ணாஹீதி, அபிஷேகம் மகா அபிஷேகம், தீபராதனை, அன்னதானம், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் சிறப்பாக  விழா நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad