மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், விஜயகாந்த் பிறந்த தின விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், விஜயகாந்த் பிறந்த தின விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், விஜயகாந்த் பிறந்த தின விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.


சோழவந்தான் பகுதி தேமுதிக சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் குருநாதன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, அன்னதானம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, முத்துப்பாண்டி ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாரியப்பன், சரவணன், சசிகுமார், நாகராஜ் பெருமாள் உள்பட தேமுதிக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad