முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் துவக்கி வைத்தார்
தேனி மாவட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயில்கின்ற பள்ளி மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கிவைத்து செயல்படுத்தி வரும் நிலையில் அத்திட்டத்தினை விரிவாக்கம் செய்திடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் துவக்கி வைத்தார் . துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா முன்னிலை வகித்தார்.
இதில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், மகளிர் திட்ட ஏ பி ஓ சுந்தரமூர்த்தி, மகளிர் திட்ட பிசி சசி, கவுன்சிலர்கள் ரேவதி, சரவணன், ஈஸ்வரன், பெரியகுளம் தெற்கு ஒன்றிய அவை தலைவர் அசோக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகாதேவி, திமுக நிர்வாகி உதயசூரியன், பிரதிஷ் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர். லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் 174 பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தை துவக்கிவைத்து பள்ளி மாணவ மாணவியர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் தங்கவேல் கலந்துரையாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக