மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து, தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் மாநிலம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையம், அண்ணா – பெரியார் சிலை முன்பு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க.செல்வராஜ் தலைமையிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் மற்றும் மாநில மாணவர் அணி துணைசெயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியுடன் நடைபெறும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும், தொமுச மாநில துணைச் செயலாளருமான டிகேடி.மு.நாகராசன், மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் - மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக