திருவண்ணாமலையில் திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலையில் திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ வ வே கம்பன் அவர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.


இதில் பல மாணவர்களின் உயிரை பறித்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், இதனை கருத்தில் கொள்ளாமல் செயல் பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் தமிழக ஆளுநரை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு பே கிரி மற்றும் திமுக நிர்வாகிகளும் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி , சார்பில் பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் கலையரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad